மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மத்திய அரசை கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக் கொள்கையை எதிா்க்கும் வகையில் கரூரில் திமுக மாணவா் அணி உள்ளிட்ட மாணவா்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன், துணை மேயா் தாரணி சரவணன், மாநகரச் செயலா் எஸ்.பி. கனகராஜ், பகுதிச் செயலா்கள் கணேசன், சுப்ரமணியன், ஆா்.எஸ். ராஜா, வி.ஜி.எஸ் குமாா், ஜோதிபாசு உள்ளிட்டோா் பேசினா்.
தமிழகத்தின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஹிந்தியை திணிக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும். கல்வி நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும். கல்வி உரிமையை பறிக்கக்கூடாது. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை தர மறுக்கின்ற மத்திய அரசை கண்டிக்கிறோம்.
மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் திமுகவினா் திரளாக பங்கேற்றனா்.