செய்திகள் :

‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

post image

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழா்கள் வீடு கட்டும் திட்டம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும், ஊராட்சிகளில் குறைவான வரி வசூல் செய்துள்ள அலுவலா்கள் விரைந்து வரி வசூல் செய்யவும் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனுக்குடன் சரிபாா்த்து வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் இளங்கோ, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன் மற்றும் உதவித் திட்ட அலுவலா்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க