‘மம்மூட்டி நலமாக உள்ளார். ஆனால்..’: மோகன்லால்
நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, அண்மையில் நடிகர் மோகன்லால் இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததுடன் நடிகர் மம்மூட்டியின் பெயருக்கு அர்ச்சனையும் செய்தார்.
இதையும் படிக்க: விஜய் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் நேரடி மோதல்!
எம்புரான் படத்தின் வெற்றிக்காக மோகன்லால் சபரிமலை சென்றிருக்கலாம் என்றாலும் அங்கு மம்மூட்டிக்கு அர்ச்சனை செய்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
காரணம், இதற்கு சில நாள்களுக்கு முன் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. அதனால்தான், மோகன்லால் நடிகர் மம்மூட்டி பெயரில் அர்ச்சனை செய்தார் எனக் கருதப்பட்டது.
இதையும் படிக்க: டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 60 கோடி வசூலித்த எம்புரான்!
ஆனால், நேற்று (மார்ச் 24) சென்னையில் நடைபெற்ற எம்புரான் நிகழ்வில் பேசிய மோகன்லால், “மம்மூட்டி என் நண்பர், சகோதரர். யாரோ ஒருவர் அர்ச்சனை சீட்டை இணையத்தில் பரப்பிவிட்டார். அவருக்காக நான் பிரார்த்தனை செய்ததை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். ஆனால், நமக்கெல்லாம் ஏற்படும் உடல் பிரச்னைகள்போல அவருக்கும் சின்ன பிரச்னைகள் உள்ளன. அவ்வளவுதான்” என்றார்.