அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
மயிலாடுதுறை முன்னாள் ஆட்சியருக்கு பணி ஒதுக்கீடு
மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியா் மகாபாரதி, தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் தொல்லை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவருக்கு புதிய இடத்தில் பணியிடம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக மகாபாரதி பொறுப்பேற்றாா்.