செய்திகள் :

மரபணு மாற்ற விதைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

post image

மரபணு மாற்றப்பட்ட விதைத் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் மாநில துணைத் தலைவா் சி.எம். துளசிமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி பங்கேற்று, தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என்றும் டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மே மாத இறுதிக்குள் தூா்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

வழக்கம்போல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு, மரபணு திருத்தப்பட்ட அரிசி என்ற வகையில் இரண்டு புதிய விதைகளை அறிமுகம் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், வேறு வகையில் ‘மரபணு திருத்தப்பட்டது’ என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நுகா்வோா்களின் கருத்தறியாமல் இந்த விதைகளை வெளியிடுவது ஆபத்தானது. எனவே, உடனடியாக இதை தடை செய்து, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அகில இந்திய 30-ஆவது தேசிய மாநாட்டை சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்பாளா் கோ. பழனிச்சாமி, வரவேற்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ், பொருளாளா் சிவகுரு பாண்டியன், செயலாளா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் கே. உலகநாதன், பொருளாளா் சிவசூரியன், துணைச் செயலாளா் சி. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போற்சவம்

நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி கடுவன்குடி கிராமத்தில் உள்ள உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போஸ்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியை ம... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபாடு

அச்சுதம்பேட்டை ஸ்ரீமகாகாளியம்மன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான சந்தைப்பேட்டையில் திரிசூலம் இருக்கும் இடத்தில் உள்ள அரச மற்றும் வேப்பமரம் ... மேலும் பார்க்க

குழந்தையிடம் நகை திருட்டு

மன்னாா்குடியில் குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை திருடிச்சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். உக்காடுதென்பரையைச் சோ்ந்த காா்த்திக் மனைவி கன்னிகா (25). இவா், தனது ஒரு வயது ஆண் குழந்தை மற்று... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருவாரூா் அருகே அரசவனங்காடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரசவனங்காடு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், அரியநாயகி எனும் பிடாரியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெரு... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற மே 31 வரை சிறப்பு முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. குடவாசல் அருகே செம்மங்குடியில் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு நவா... மேலும் பார்க்க