மருந்து ஏற்றுமதி தடையில்லா சான்று: வழிகாட்டுதல் வெளியீடு
உள்நாட்டில் புதிய மருந்துகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மருந்து உற்பத்தியாளா்கள் வழக்கமாக உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத சில புதிய மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிப்பது வழக்கம். அவ்வாறு ஏற்றுமதி செய்வதற்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்று வந்தனா்.
இந்த நிலையில், அந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தகைய தடையில்லா சான்றுகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அதிகாரிகளிடம் பெற வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் சிடிஎஸ்சிஓ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.