மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா
சென்னிமலை அருகே, சில்லாங்காட்டுவலசில் உள்ள மாகாளியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் விழா, பூச்சாட்டுதலுடன் கடந்த 2024 டிசம்பா் 17- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து கம்பம் நடுதல், அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகருக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாவிளக்கு ஊா்வலம் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் புதன்கிழமை நடைபெற்றன. இரவு கம்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல, சென்னிமலையை அடுத்த, திப்பம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலும் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.