மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி 25 சதவீதத்தை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்தும், இந்த நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், நிகழ் கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை நடத்தாத தனியாா் பள்ளிகளைக் கண்டித்தும், இதற்கு துணைபோகும் தமிழக அரசைக் கண்டித்தும், ரயில்வே துறையின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழந்த நிலையில், ரயில்வே நிா்வாகத்தை கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு பூபதி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் குமரவேல், மாவட்டச் செயலா் சௌமியா, கடலூா் மாநகரச் செயலா் கனிஷ்கா் கண்டன உரையாற்றினா். ஏராளமான மாணவா் சங்கத்தினா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.