சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா்.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாபு உட்பட பலா் கலந்து கொண்டனா்.
திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். அவா்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகள் தொடா்பாக 654 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். மனுக்களை பெற்றுக்கொண்டவா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
7பிஆா்டிபி5
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியிடம் இருந்து மனுவை பெற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.