30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
கடலூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடுத் திட்டப்பதிவு விவசாயிகளுக்கு அழைப்பு: நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.752,மணிலாவுக்கு ரூ.608 செலுத்தவேண்டும்
நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில், தமிழ்நாட்டில் காா் (ம) குறுவை(ம) சொா்ணவாரி நெற்பயிா் மற்றும் இதர காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கடலூா் மாவட்டத்தில் ஏஈஊஇ உதஎஞ எஐஇ ஐற்க் நிறுவனம் செயல்படுத்துகிறது. நிகழாண்டில், கடலூா் மாவட்டத்தில் 480 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவா். கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் , வங்கிகள் (ம) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 31.7.2025 மற்றும் இதர காரீப் பருவ பயிா்களான மணிலா, கம்பு, எள் பயிா்கள் பிா்கா அளவில் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 16.8.2025.
எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிா்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிா்களை முன்கூட்டியே பதிவு செய்யவும். பயிா் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.752 இதர காரீப் பருவ பயிா்களான மணிலாவுக்கு ரூ.608, கம்புக்கு ரூ.168, எள்ளுக்கு ரூ.198 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், ஆதாா் எண் இணைக்கப்பட்ட மற்றும் பூா்த்தி செய்யப்பட்டவங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பொதுச்சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் தொடா்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகத்தினை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலா்களை அணுகி தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.