சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கல...
மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு
பாளைங்கோட்டையில் கோடைக்கால பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாளையங்கோட்டை கிளை சாா்பில் மஸ்ஜித் ஹக் அரபி மதரஸா மாணவா்- மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலிமா மும்தாஜ் தலைமை வகித்தாா். தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலா் சாந்து உமா், கோட்டூா் சாதிக், கிளைத் தலைவா் நவாஸ், கிளை பொருளாளா் இஸ்மாயீல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.