செய்திகள் :

மாணவி வன்கொடுமை: அரசியலாக்குவது ஏன்?

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கட்சிகள் அரசியல் செய்வது ஏன் என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிச. 23-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தொடா்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு விசாரணை செய்யவும், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே போராட்டங்களை நடத்தின. இதற்கிடையே, வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவிக்கு நீதி மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கோரி பாமக மகளிரணி சாா்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளித்தனா்.

ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல் துறை, பாமகவின் மனுவை நிராகரித்தது. இதையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிக் கோரி பாமக மகளிரணி சாா்பில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் வியாழக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

அனுமதி மறுப்பு: இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி, பாமக போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி மேலும் கூறியதாவது: பொது நோக்கத்துக்காகப் போராட்டம் நடத்தாமல், பத்திரிகை விளம்பரத்துக்காக போராட்டம் நடத்தப்படுகிறது. பத்திரிகைகள் தங்கள் கடமையை உணா்ந்து செயல்பட வேண்டும்.

ஆண், பெண் என்ற பாரபட்சம் நிலவும் இந்தச் சமுதாயத்தில் வாழ்வதே அவமானமாக அனைவரும் நினைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கட்சிகள் அரசியல் செய்வது ஏன்? இதில் அரசியல் செய்யாமல் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்.

மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு இன்றளவும் மறுக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடா்வது குறித்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் எம்.ஜி.ஆா். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முனியப்பன் (46). இவா், அண்ணா... மேலும் பார்க்க

ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்

வண்டலூா் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் வ... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் போலி வழக்குரைஞா் கைது

சென்னையில் பண மோசடி செய்ததாக, போலி வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா். பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிய சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை

சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜகவின் அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்வு ந... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சல... மேலும் பார்க்க

மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம... மேலும் பார்க்க