செய்திகள் :

மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் பல கட்டங்களாகப் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

சென்னை மாவதரம் மண்டல அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சா் மாதவரம் மூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது. இதில், பங்கேற்றோா் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தினா்.

போரூா் காரம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் பென்ஜமின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், திருவண்ணாமலையில் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூா் ராஜூ, நாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன், சேலத்தில் செம்மலை, ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

காவல் துறையின் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய அதிமுகவினா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

போராட்டம் தொடரும்: இந்த விவகாரம் தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழகத்தில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிா்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவைச் சோ்ந்தவா், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளா் என்று குற்றப் பின்னணி பட்டியல் நீளுகிறது. அதனால், இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும். வழக்கில் தொடா்புடைய ஞானசேகரன் குறிப்பிடும் அந்த சாா் யாா்? என்று அவா் கூறியுள்ளாா்.

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு தத்துக் கொடுக்கவும் இல்லை; தாரைவாா்க்கவும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும்... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்கள்: விநியோகத்தை 4 நாள்களில் முடிக்க உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. 4 நாள்களுக்குள் டோக்கன்கள் வழங்கும் பணியை நிறைவு செய்ய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரிசி ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக பொய் கூறுவதா? எடப்பாடி கே.பழனிசாமிக்கு அமைச்சா் ரகுபதி கண்டனம்

திராவிட மாடல் அரசை குறைகூற காரணங்கள் ஏதுமின்றி, அரசியல் ஆதாயத்துக்காக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருவதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் இல்லை: அரசு

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,''காலை உணவுத் தி... மேலும் பார்க்க

மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு ப... மேலும் பார்க்க

சௌமியா அன்புமணி கைது: பாமகவினர் ஆர்ப்பாட்டம்

சௌமியா அன்புமணியின் கைதைக் கண்டித்து கடலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தி பாமக மகளிரணி இன்று போராட்டம் நடத்தியது. திமுக அரசைக்... மேலும் பார்க்க