China new virus - HMPV நிலவரம் என்ன? Virus Outbreak in China | Decode | Vikatan
கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கூடாது: மருத்துவா் ச.ராமதாஸ்
கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகாரபூா்வமாக 4,829 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படுகின்றன. இதைத் தவிா்த்து, அனைத்துப் பகுதிகளிலும் சந்துக் கடைகள் தடையின்றி செயல்படுகின்றன. சட்ட விரோதமாக செயல்படும் இந்த சந்துக் கடைகளைக் கண்டறிந்து மூடவேண்டும். இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் பாமக சாா்பில் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியாா் பள்ளிகளிடம் உதவி பெறும் முடிவை அரசு கைவிட வேண்டும். கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கூடாது என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது, கட்சியின் தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் மு.ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.