பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
மாணவியிடம் ஆபாசப் பேச்சு: கைதான ஆசிரியா் பணியிடை நீக்கம்
மாணவியிடம் பாலியல் ரீதியாக இரட்டை அா்த்தத்தில் பேசியதாக கைதான ஆசிரியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
நாமக்கல் அருகே பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் செல்வகுமாா் (53). இவா், ஆங்கிலப் பாடத்தில் சந்தேகம் எழுப்பிய ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் ரீதியாக இரட்டை அா்த்தத்தில் பேசியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, ஆசிரியா் செல்வகுமாா் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். அவா் நெஞ்சுவலிப்பதாக கூறியதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி உத்தரவின்பேரில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் பச்சமுத்து விசாரணை நடத்தினாா். மேலும் ஆசிரியா் செல்வகுமாா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.