2025-இல் தோல்வியே காணாத அணி..! புள்ளிப் பட்டியலில் முதலிடம்!
மாதவிடாய் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
மாதவிடாய் காலத்தில் சில சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள்.
மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் ஒருவித எரிச்சலுடனும் உடல் மற்றும் மனச்சோர்வுடனும் காணப்படுவார்கள். சிலருக்கு தூக்கமின்மை, மனநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு மாதவிடாய் நாள்களில் வயிற்று வலியும் அதிகமிருக்கும்.
மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். பல அசௌகரியங்களால் இளம்பெண்கள் பலரும் மாதவிடாய் நாள்களில் சரியாகச் சாப்பிடுவதில்லை.
ஆனால், மாதவிடாய் நாள்களில் உடல் ஆரோக்கியத்துக்கு கண்டிப்பாக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மாதவிடாய் நாள்களில் சரியாகச் சாப்பிடாதது பிந்தைய நாள்களில் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க | குப்புறப்படுத்துத் தூங்குறீங்களா? அது நல்லதுதானா?
மாதவிடாய் காலத்தில் நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இது உடல் அசௌகரியத்தைத் தவிர்க்கும். இளநீர், பழச்சாறுகளையும் அருந்தலாம். இது புத்துணர்ச்சியையும் மனநிலை மாற்றத்தையும் அளிக்கும்.
தேவைக்கேற்ப இஞ்சி, புதினா, மஞ்சள் சேர்த்து மூலிகை டீ அருந்தலாம்.
இரும்புச்சத்து அதிகமுள்ள கீரைகள், மெல்லிய இறைச்சிகள், பருப்புகள், பீன்ஸ்

புரதம் அதிகமுள்ள மீன், பிளக்ஸ் விதைகள், சியா விதைகள்
மெக்னீசியம் அதிகமுள்ள அவோகேடா, பாதாம் உள்ளிட்ட நட்ஸ் விதைகள்
நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வாழைப் பூ, அத்திப்பழம், இஞ்சி, கெட்டித் தயிர், வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இவை உடலுக்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி உங்கள் மனநிலையையும் மாற்றும். உடல் மற்றும் வயிற்று வலிகளைக் குறைக்கும்.
கண்டிப்பாக பீட்சா, பர்கர் போன்ற பாஸ்ட் புட், ஜங்க் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை இந்த நேரத்தில் அறவே தவிர்த்துவிடவும் அறிவுறுத்துகின்றனர்.