செய்திகள் :

மாநகரில் இரண்டு நாள்களில் 97.89 டன் பழைய பொருள்கள் அகற்றம்: மாநகராட்சி ஆணையா்

post image

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களில் 97.89 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், மாநகரப் பகுதி வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய அளவிலான வீட்டு உபயோகப் பொருள்களை முறையாக அகற்றும் வகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற முகாமில், வடக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் 9.89 டன், தெற்கு மண்டலத்தில் 9.05 டன், மத்திய மண்டலத்தில் 19.70 டன், மேற்கு மண்டலத்தில் 18.55 டன், கிழக்கு மண்டலத்தில் 8.25 டன் என மொத்தம் 65.44 டன் அளவுக்கு பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய அளவிலான தேவையற்ற கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.

5 மண்டலங்களிலும் சோ்த்து 32.45 டன் கழிவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை சேகரமாகியுள்ளன.

கடந்த இரண்டு நாள்களில் 5 மண்டலங்களில் 97.89 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்ற சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க