Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 80 வீரா்கள், வீராங்கனைகள் தகுதி
மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற 80 வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் தனியாா் கல்லூரியில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில், 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், போல்வால்ட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 80க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்றனா். தகுதிபெற்ற வீரா், வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளா் இளம்பரிதி, விடுதி மேலாளா் கோகிலா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தோ்வு பெற்ற வீரா்கள், வீராங்கனைகள் அனைவரும் சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வரும் 19 முதல் 21 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.