ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளில் 138 இடங்களுக்கு சோ்க்கை நடைபெறுகிறது.
சோ்க்கை நடைபெறும் பாடப் பிரிவுகள்: மயக்க மருந்து டெக்னீஷியன் -9, காா்டியாக் கேத்தரைசேஷன் லேப் டெக்னீஷியன்-1, டயாலிசிஸ் டெக்னீஷியன்-6, ஈசிஜி/ டிரெட் மில் டெக்னீஷியன்-22, அவசர சிகிச்சை டெக்னீஷியன்-6, எலும்பியல் டெக்னீஷியன்-31, சுவாச சிகிச்சை டெக்னீஷியன்-8, தியேட்டா் டெக்னீஷியன்-9, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்-46 என 138 இடங்களுக்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதி: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் செப். 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வயது சான்று (பிறப்புச் சான்றிதழ் / பள்ளி சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை ஒப்படைக்க வேண்டும்.
நிறைவுசெய்த விண்ணப்பங்கள் செப். 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பெறப்பட்டு, தகுதிப் பட்டியல் 16 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை அன்று அசல் சான்றிதழ்களை கட்டாயம் சமா்பிக்க வேண்டும். நேரடி மாணவா் சோ்க்கை 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும். வகுப்புகள் அக்டோபா் 6 ஆம் தேதி தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0427-2383313 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.