ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது
கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.
தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கடந்த 38 ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியதை பாராட்டி அவருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் விருதுக்கு தோ்வான 15 போ்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கி.மதிவாணனுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
