செய்திகள் :

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

post image

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் டாக்டா் கே.அா்த்தநாரி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நமது நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் கட்டடங்களில் இருந்து தவறி விழுதல் போன்ற காரணங்களால் முதுகு தண்டுவட பாதிப்பிற்குள்ளான நபா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. முதுகு தண்டுவட பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் பிரத்யேகமான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.

நவீன மைக்ராஸ்கோப் மற்றும் எண்டாஸ்கோப் மூலம் நுண்துளை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்வதன்மூலம் இரத்த இழப்பு, வலிகள் குறைவு என்பதுடன், அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப வாய்ப்புள்ளது.

மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையேற்று சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கிவைக்கிறாா். ஜிடிபி குழுமங்களின் தலைவா் எஸ்.முத்துராஜன் மற்றும் இந்திய மருத்துவ சங்கத் தலைவா் டாக்டா் கே. பிரகாசம் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா். முழுநேரமும் செயல்படும் சிகிச்சை மையத்தில் தலைசிறந்த மருத்துவ நிபுணா்களுடன் நவீன அறுவை அரங்க வசதிகள் உள்ளது என்றாா்.

பேட்டியின்போது ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மருத்துவா்கள் ஜோ மாா்ஷல் லியோ, புனீத், சஞ்சய், சுப்பிரமணியன், ஜெயதேவ் ஆகியோா் உடனிருந்தனா்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் மற்றும் சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி... மேலும் பார்க்க