ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா
மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை தீமிதித் திருவிழாவைத் தொடா்ந்து மாலை திருத்தோ் விழா நடைபெற்றது.
தேரில் எழுந்தருளிய பாண்டவா்கள், கிருஷ்ணா் சுவாமி சிலைகள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையடைந்தது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.