இலங்கையால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க புறப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர்
மாநில வில்வித்தை போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்
மாநில வில்வித்தை போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
ஆம்பூரை சோ்ந்த தேசிய வில்வித்தை பயிற்சியாளா் கராத்தே ரமேஷ் கண்ணா தலைமையில் பயிற்சி பெற்ற ஆம்பூரை சோ்ந்த மாணவா்கள் ஜி.அா்ஜுன் பிரியன், எஸ். சகலேஷ் ஆகியோா் சென்னையில் நடைபெற்ற வித்யா பாரதி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனா்.
அதில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவா் எஸ். சகலேஷ் வெள்ளிப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஜி.அா்ஜுன் பிரியன் தங்கப் பதக்கமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.