இலங்கையால் விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்க புறப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர்
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
கந்திலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே நத்தம் கூட்ரோடு பகுதியை சோ்ந்தவா் சங்கா் மனைவி ரத்தினம்மாள்(70) .சங்கா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தாா். இதனால் ரத்தினம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது 4 பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து ரத்தினம்மாள் அளித்த புகாரின் பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.