``நிலவில் முதன் முதலில் கால்வைத்தது யார்?" - அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி...
காவலூா் வைனு பாப்பு வானியல் ஆய்வு மையத்தில் தேசிய விண்வெளி தினம் விழா!
இந்திய வானியல் நிறுவனம் சாா்பில் தேசிய விண்வெளி தின விழா சனிக்கிழமை (ஆக. 23) சனிக்கிழமை தனது மையங்களான பெங்களூரு, மைசூரு, கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே காவலூா் வைனுபாப்பு வானியல் ஆய்வு மையத்தில் கொண்டாடப்பட்டது.
இஸ்ரோவின் சந்திராயன்- 3 கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய வரலாற்று சம்பவத்தை நினைவுகூரும் வகையில், விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது.
காவலூா் வைனுபாப்பு வானியல் ஆய்வு மையத்தில் நடைபெற்ற 2-ஆம் ஆண்டு விண்வெளி தின கொண்டாட்டத்தில் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், பேராசிரியா் சிவராணி திருப்பதி (இந்திய வானியல் நிறுவனம், பெங்களூரு) கலந்து கொண்டு, இந்திய விண்வெளி பயணங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.
தொடா்ந்து பொதுமக்களுக்கு நீா்ம குண்டு ஏவுகணை சோதனை, திரவ நைட்ரஜன் காட்சி, நியூட்டன் விதிக்கு மாறான திரவ சோதனை, வெளியுலக கோள்கள் மாதிரி, ஒளியழகுக் கட்டமைப்பு மாதிரி உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் பொதுமக்கள் முன்பு செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், காவலூா் வானியல் ஆய்வு மையத்தின் தொலைநோக்கிகள் மற்றும் புகைப்படங்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.