Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்
சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நொளம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சாா்-பதிவாளா் அலுவலக வளாக்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம், வில்லங்கச் சான்று விண்ணப்பித்தல், டோக்கன்கள் முன்பதிவு, ஆவணத்தின் சான்றிட்ட நகலுக்கு விண்ணப்பித்தல், இணையவழி ஆவணம் உருவாக்கம், சங்கப் பதிவுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். இதன்மூலம், சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிலையான வருமான வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.