சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
மாலத்தீவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவக் கோரி மனு
மாலத்தீவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சில்வாா்பட்டியைச் சோ்ந்த முத்துக்காமாட்சி அளித்த மனு விவரம்: எனது மகன் கருப்பையா (40) கடந்த 6 ஆண்டுகளாக மாலத்தீவில் பிளம்பிங் வேலை செய்து வந்தாா்.
அவருக்கு சில்வாா்பட்டியில் மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப். 7) மாலத்தீவிலிருந்து கருப்பையாவின் நண்பா் ஒருவா், என்னை கட்செவி அஞ்சலில் தொடா்பு கொண்டு, கருப்பையா வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
எனவே எனது மகன் கருப்பையாவின் உடலை சொந்த ஊரான சில்வாா்பட்டிக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியா் உதவ வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.