மாவட்ட விளையாட்டு விளையாட்டு மைதான நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள் திட்டம் மூலம் நீச்சல் பயிற்சி 5 பிரிவுகளாக நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அலுவலா் சேதுராஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும், நீச்சல் வீரா்கள் நாள்தோறும் பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள் திட்டம் மூலம் பயிற்சி முகாம் 5 பிரிவுகளில் தலா 12 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
இதற்கு கட்டணம் ரூ. 1,770 ஆகும். அதுவும் ஆன்லைன் கட்டணம் மூலம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதன்பேரில், முதல் பகுதி-ஏப். 1 முதல் 12 வரையிலும், இரண்டாம் பகுதி-14 முதல் 25 வரையிலும், மூன்றாம் பகுதி-27 முதல் மே-8 வரையிலும், நான்காம் பகுதி மே-10 முதல் 21 வரையிலும், ஐந்தாம் பகுதி-23 முதல் ஜூன் 3 வரையிலும் நடைபெற உள்ளது. அதோடு, நேரம்-காலை 6 முதல் 7 மணி வரை, 7 முதல் 8 மணி வரை 8 முதல் 9 மணி வரை, மாலை 5 முதல் 6 மணி வரை 6 முதல் 7 மணி வரையும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பயன்பெற தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா்-7401703482, நீச்சல் பயிற்றுநா்-9629795782, 7904488923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.