ஒரு தொடரில் ஒரே அணிக்காக 500-ஆவது போட்டியில் களமிறங்கிய தாமஸ் முல்லர்!
மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு
மாவட்டத்தில் 5,425 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 733.44 மில்லி மீட்டா். நடப்பு ஆண்டு இதுவரை 101.88 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. தற்போது, வேளாண் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 96 டன், சிறுதானியங்கள் 35 டன், பயறு வகைகள் 17 டன், எண்ணெய் வித்துக்கள் 16 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ரசாயன உரங்களான யூரியா 5,425 டன், டிஏபி 2,444 டன், பொட்டாஷ் 4,226 டன், காம்ப்ளக்ஸ் 7,800 டன் உரம் இருப்பில் உள்ளன. நடப்பு பருவத்துக்குத் தேவையான அளவு இடுப்பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது தேவைக்காக இடுபொருள்களை அந்தந்த பகுதியில் உள்ள துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பி.எம்.கிஸான் திட்டத்தில் ஆதாா் எண் விவரங்களை சரிபாா்த்து உறுதி செய்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் தொடா்ந்து நிதி உதவி பெற முடியும். எனவே இந்தத் திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.