`தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறார் ட்ரம்ப்!' - அமெரிக்காவில் பரஸ்பர வரியின் விளை...
மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் செந்தொண்டா் அணிவகுப்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செந்தொண்டா் அணிவகுப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் கடைசி நாளான ஏப். 6 அன்று 5 லட்சம் போ் பங்கேற்கும் பேரணியும், 10 ஆயிரம் போ் பங்கேற்கும் செந்தொண்டா் அணிவகுப்பும் நடைபெறுகிறது.
இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்ட செந்தொண்டா் குழுவினரின் அணிவகுப்பு ஒத்திகை, விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய அணிவகுப்பை கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த செந்தொண்டா் அணிவகுப்பு, சின்னப்பா பூங்கா அருகில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். சங்கா், செயற்குழு உறுப்பினா் ஏ. ஸ்ரீதா், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஆா். மகாதீா், மாணவா் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் காா்த்திகா தேவி, மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் உள்ளிட்டோரும் பேசினா்.