மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்
சீா்காழி வட்டம் கோதண்டபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், சீா்காழியிலிருந்து கொள்ளிடம், கோதண்டபுரம், புளியந்துறை வழியாக புதுபட்டினத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் நேதாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் கேசவன், ஒன்றிய குழு உறுப்னா் கவியரசன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய செயலாளா் லெனின் மற்றும் நிா்வாகிகள் ராஜ்குமாா், ராமலிங்கம் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மறியல் ஈடுப்பட்டனா்.
கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் ஜான்சன், வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், உதவி திட்ட அலுவலா் விமலா மற்றும் கொள்ளிடம் காவல்நிலைய ஆய்வாளா் ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.