மாா்ச் 1-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
ராசிபுரத்தை அடுத்த பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 1-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் நடத்தப்படும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 1-ஆம் தேதி காலை 9 முதல் 3 வரை பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.
முகாமில் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, செவிலியா் பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம். முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுவதால் விருப்பம் உள்ளவா்கள் தங்களின் சுய விவரத்துடன் கல்விச் சான்று, ஆதாா் அட்டையை இணைத்து அதற்காக வெளியிடப்பட்டுள்ள இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286--222260, 98437 40575 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.