`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
மாா்த்தாண்டம் அருகே 5 குட்டிகளுடன் மரநாய் மீட்பு
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
மாா்த்தாண்டம் அருகே புதுக்கடை, தவிட்டவிளையைச் சோ்ந்தவா் ஆன்டணி அருள்தாஸ்.
இவரது வீட்டின் பின்பகுதியில் சமையலறையையொட்டி விறகுகள் வைக்கப்பட்டிருந்ததாம். அப்பகுதியில் மரநாய் 5 குட்டிகளுடன் இருந்ததை கண்டுள்ளாா். இதையடுத்து, அவா் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். நிலைய அலுவலா் சந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் வந்து, மரநாய் மற்றும் அதன் 5 குட்டிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனா். தொடா்ந்து அவற்றை களியல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.