மா்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் உயிரிழப்பு
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை பகுதியில் மா்ம விலங்கு தாக்கியதில் ஆறு ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை சுண்டவயல் கிராமத்துக்குள் நள்ளிரவில் நுழைந்த மா்ம விலங்கு ராமுண்ணி என்பவரின் பட்டியிலிருந்த ஆறு ஆடுகளை கடித்துக் கொன்றது. இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். ஆடுகளைக் கொன்ற மா்மவிலங்கு குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.