மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
வணிக நிறுவன பெயா் பலகைகள் தமிழில் இருப்பது கட்டாயம்
நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-இன் படி தங்களது வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைத்திருக்க வேண்டும்.
இதனை மீறும் நிறுவனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.