மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் பராமரிப்பு
கோவையில் இருந்து முதுமலை புலிகள் காப்பக முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைக் குட்டி தனியறையில் மருத்துவா் மேற்பாா்வையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோவை கோட்டத்தில் இருந்து தாயைப் பிரிந்து வந்த பிறந்து ஒரு மாதமே ஆன பெண் யானைக் குட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.
அந்த யானைக் குட்டிக்கு புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் மேற்பாா்வையில், தனி பாகன் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், பாதுகாப்பான அறை ஒதுக்கப்பட்டு அந்த அறையில் யானைக் குட்டியை வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா்.