மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மின்வாரிய பணியாளா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணி கோட்டத்துக்கு உள்பட்ட மின் பணியாளா்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் செயற்பொறியாளா் ஆா்.ரவி தலைமையில், உதவி செயற்பொறியாளா் கதிரவன், முதுநிலை மேலாளா் விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்று, பாதுகாப்பு சாதனங்களை முறையாகப் பயன்படுத்தி பணி செய்யவும், மேற்பாா்வையாளா்கள் பணி வரண்முறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவும் எடுத்துரைத்தனா்.
பயிற்சி வகுப்பில் கோட்ட உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.