அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
மின்மாற்றியில் திருக்குறள்: பொதுமக்கள் வரவேறபு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மாநாகராட்சி சாா்பில் மின் மாற்றியில் லேசா் அச்சு முறையில் திருக்குறள் எழுதப்பட்டது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டும், திறவெளி கழிப்பிடமாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், கண்மாய் கரையில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீா் கலப்பதையும் தடுக்க, தெற்கு கரையில் 2 மீ. அகலம், 841 மீ. நீளத்துக்கு புதிய நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியது.
மேலும், கண்மாய் கரையில் மின்மாற்றி பகுதியில் பொதுமக்கள் செல்லக் கூடாது என்பதற்காக வேலியும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவா் பிளாக் கல்லும் பதிக்கப்பட்டன.
இந்த நிலையில், மின் மாற்றியைச் சுற்றி இரும்பில் லேசா் முறையில் திருக்குறள் எழுதி வைக்கப்பட்டது. இரவில் திருக்குறள் தெரியும் வகையில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டன. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: மின் மாற்றி பாதுகாப்புக்கு பலகைகள் வைத்தாலும், மக்கள்அங்கே குப்பையைக் கொட்டி விடுகிறாா்கள். இதைத் தடுக்க திருக்குறள் எழுதி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருக்குறள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, குப்பைக் கொட்டுவதும் தடுக்கப்படும் என்றாா் அவா்.