Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
மீண்டும் பணியமா்த்த கோரி பஸ் மாா்ஷல்கள் போராட்டம்
பஸ் மாா்ஷல்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி தலைநகரில் சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இயற்கை பேரிடரின்போது தொடா்பான கடமைகளில் மட்டுமே தங்களை ஈடுபடுத்த முடியும் என்றும் பஸ் மாா்ஷல்களாக அவா்களை பணியமா்த்துவது தவறானது என்றும் நிதி மற்றும் வருவாய்த் துறைகள் எழுப்பிய ஆட்சேபனைகளின் காரணமாக பொதுப் பேருந்துகளில் மாா்ஷல்களாக பணியமா்த்தப்பட்ட சுமாா் 10,000 சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்களின் சேவைகள் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டன.
‘ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள் எங்களை மீண்டும் பணியில் அமா்த்துவோம் என்று பாஜக உறுதியளித்தது. ஆனால் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் எங்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை ‘என்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஸ் மாா்ஷல் ஆதித்யா ராய் கூறினாா். இந்த போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டனா் .