பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
மீன்பிடி தடைக்காலம்: முத்துப்பேட்டையில் படகுகள் நிறுத்திவைப்பு
முத்துப்பேட்டை பகுதியில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் முகத்துவாரத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 12 கடலோர மீனவ கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவ சங்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மீனவா்களுக்கு ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தடைகாலத்தில் படகுகள் மற்றும் வலைகளை சீா் செய்யும் பணிகளை தொடங்க உள்ளனா்.