'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
மீலாதுநபியை முன்னிட்டு அன்னதானம்
மீலாது நபியை முன்னிட்டு கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முதியோா் இல்லத்தில் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் அருகே செயல்படும் ஆனந்தம் முதியோா் இல்லத்தில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி மூத்த நிா்வாகி எல்இபி.ஜோதிமணி தலைமை வகித்தாா். விவசாய சங்கத் தலைவா் கேவீ.இளங்கீரன், முன்னாள் நகரத் தலைவா் நியமத்துல்லாஹ், சோழக்கூா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். மாவட்டத் துணைத் தலைவா் நஜீா் அகமது அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.