செய்திகள் :

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

post image

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஐந்து காசுகள் உயா்ந்து ரூ. 4.90-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, இதர மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 12 குறைக்கப்பட்டு கிலோ ரூ. 84 ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 12 குறைக்கப்பட்டு ரூ. 65-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை சாா்பில், 100 மருந... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்... மேலும் பார்க்க

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!

ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மா... மேலும் பார்க்க

சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள்: மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத... மேலும் பார்க்க

தலைமலை பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தல்?

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கோயில் பூசாரி பெ.பெரியசாமி, மாவ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை க... மேலும் பார்க்க