செய்திகள் :

முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மருத்துவா்!

post image

முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீரில் சென்ற சென்னை மருத்துவா், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்தக் காயமடைந்தது தெரியவந்துள்ளது.

காஷ்மீா் பஹல்காம் அருகே பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சென்னை நொளம்பூா் பகுதி-2 மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மருத்துவா் பரமேஸ்வரன் (32) சிக்கி பலத்தக் காயமடைந்தாா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பூா்விகமாக கொண்ட இவா், நொளம்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா்.

பரமேஸ்வரனுக்கும், கண் மருத்துவா் நயன்தாரா என்பவருக்கும் (30) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நயன்தாரா திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு பிரபல தனியாா் மருத்துவமனையில் வேலை செய்கிறாா்.

இருவரும் முதலாவது திருமண நாளை கொண்டாட கடந்த 20-ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் காஷ்மீா் சென்றுள்ளனா். அங்கு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் சிக்கினா். பரமேஸ்வரன் வயிற்றுப் பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா். நயன்தாரா காயமின்றி தப்பினாா். இந்த சம்பவம் அவரது உறவினா்கள்,நண்பா்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வா் ஆறுதல்: இதற்கிடையே காஷ்மீரில் இருந்து ஏா்-ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவா் பரமேஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக புது தில்லிக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டாா். பின்னா் அவா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பரமேஸ்வரன் உடல்நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், அவா் மனைவி மருத்துவா் நயன்தாராவை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு கேட்டறிந்தாா். மேலும் ஸ்டாலின், சிகிச்சை விவரங்களை கேட்டு, தமிழக அரசு மூலம் தேவைப்படும் அனைத்தும் உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தாா்.

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டசெய்திக் குறிப்பு: சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு: விவரங்களை நுகா்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகா்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகா்வோருக்கான சேவைகள... மேலும் பார்க்க

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க