ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது
முதல்வருடன் மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு
சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலினை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரெ.தங்கம் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் சந்தித்தனா். உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களில்
மாற்றுத் திறாளிகளை நேரடியாக நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனா். அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் முதல்வருக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.