செய்திகள் :

முதல்வா் தலைமையில் இன்று துணைவேந்தா்கள் கூட்டம்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன அதிகார மசோதா, வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி காலதாமதம் செய்ததாக புகாா் எழுந்தது.

இதையடுத்து அதற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிா்ணயம் செய்யக்கோரியும் தமிழக அரசு கடந்த 2023-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்களையும் நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது. இந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஏப்.8-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது.

இதன் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது. தொடா்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது. வருங்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வா் வசமாகியுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வா் ஆலோசனை: இத்தகைய சூழலில் தமிழகத்தின் உயா்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஆளுநா் ஆா்.என்.ரவி வசமிருந்த அதிகாரங்கள், உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்றடைந்த நிலையில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் பல்கலைக்கழக அளவில் மட்டுமல்லாது மாநில அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் முதல்வா் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க