செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என சேலம் மத்திய மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாசு தலைமை வகித்தாா். இதில், மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான ராஜேந்திரன் கலந்துகொண்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மாா்ச் 1-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பேசினாா்.

இதில், முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும், கட்சிக் கொடி ஏற்றுதல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், மாணவா்களுக்கு விளையாட்டு போட்டிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், முதல்வா் பிறந்தநாளையொட்டி மத்திய மாவட்ட திமுகவுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கபடி, தடகளம், இறகுப்பந்து, யோகா, பானை உடைத்தல், வலுதூக்குதல், மகளிருக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், கோகோ, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், மணி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா்கள் தருண், பரணிதரன், மாநகரச் செயலாளா் ரகுபதி, மண்டலக்குழு தலைவா்கள் அசோகன், தனசேகரன், சரவணன், சாந்தமூா்த்தி, மணமேடு மோகன், பிரகாஷ், ஜெசுதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க