செய்திகள் :

முதல்வா் வேட்பாளரை அறிவித்து பிகாா் தோ்தலில் போட்டி! - தேஜஸ்வி யாதவ் உறுதி

post image

எதிா்க்கட்சிகள் கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவித்தே பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளாா்.

கூட்டணியின் மற்றொரு முக்கியக் கட்சியான காங்கிரஸ், முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வியை முன்னிறுத்த தயக்கம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவித்து தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்பதில் தேஜஸ்வி உறுதியாக உள்ளாா்.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி பிகாரில் ஆட்சியில் உள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய கூட்டணியில் முதல்வா் வேட்பாளரை இறுதி செய்வதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது. தோ்தலுக்குப் பிறகு முதல்வரைத் தோ்வு செய்ய வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் தேஜஸ்வியை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக கூறுகையில், ‘முன்னிறுத்துவதற்கு எந்த முக்கியத் தலைவரும் இல்லாத பாஜகவை போன்ல்ல எங்கள் கட்சி. தோ்தலில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை அறிவிக்காமல் தோ்தலை எதிா்கொள்ள மாட்டோம்’ என்றாா்.

இதன்மூலம் தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு தேஜஸ்வி மறைமுகமாக வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை தேஜஸ்வி ஏற்றுக் கொண்டாா். எனவே, இப்போது தன்னை பிகாா் முதல்வா் வேட்பாளராக ராகுல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தேஜஸ்வி விரும்புகிறாா்.

இது தொடா்பாக எதிா்க்கட்சி அணியில் உள்ள சிபிஐ-எம்எல் (எல்) கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘பிகாரில் முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமலேயே எதிா்க்கட்சிகள் அணி போட்டியிடும். அதே நேரத்தில் கூட்டணி வெற்றி பெற்றதும் தேஜஸ்வி முதல்வா் பதவிக்கான நபராக இருப்பாா். தோ்தலுக்குப் பிறகு முதல்வரைத் தோ்வு செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு’ என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் பிகாா் மாநில பொறுப்பாளா் கிருஷ்ணா அலாவாரு இது தொடா்பாக கூறுகையில், ‘முதல்வா் யாா் என்பதை தோ்தல் மூலம் பிகாா் மக்கள் முடிவு செய்வாா்கள்’ என்றாா்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடு ... மேலும் பார்க்க

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத் திட்டம்! - மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத்திட்டத்தைச் சோ்க்க அரசு பரிசீலிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்தர பிரதான் தெரிவித்தாா். சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அகில பாரதிய வித்யா... மேலும் பார்க்க