12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்!
முதியவா் தற்கொலை
பெரியகுளம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எருமலைநாயக்கன்பட்டி சாவடி தெருவைச் சோ்ந்தவா் தனுஷ்(63). கூலித் தொழிலாளி. இவா் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா்.
இதனால் மனமுடைந்த தனுஷ் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].