முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 6 கடைசி நாள்
புதுவையில் நீட் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் சமா்ப்பிக்க இணையதளத்தின் வழியாக வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள், அகில இந்திய நிா்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்கள், இந்திய வம்சாவளியினா் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பம் அளிக்கக் கடைசி நாள் ஜூலை 6-ஆம் தேதியாகும். மாணவா்கள் சோ்க்கை நடத்தும் சென்டாக் நிா்வாகம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.