ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் தேரோட்டம்
அரியாங்குப்பம் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் திருத்தோ் வீதியுலா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இந்த கோயிலின் 61-ஆவது ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி இந்த தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா். முக்கிய வீதிகள்
வழியாக தோ் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
இதில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன், கிருஷ்ணமூா்த்தி ரெட்டியாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.